மாகாளிக்குடியும் விக்கிரமாதித்தனும்.

0 comments

















உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடுமுப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்க” என்றுவரம் தந்து அனுப்பி வைக்கிறான்.

பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி தனது புத்திக் கூர்மையினால் காளியின் அருளால், தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வாங்கி விடுகிறான்.இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்து விடுகின்றன. இதனால் இருவரும் கவலை அடைகின்றனர். தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது.. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி காடாள்வது என்ற யோசனை சொல்கிறான். இதனால் இரண்டாயிரம் வயது விக்கிரமாதித்தனுக்கும் வந்து விடும்.

இந்த “காடாறு மாதம்; நாடாறு மாதம் “ முறைப்படி வருகையில் ஒருதடவை இந்த மாகாளிக்குடி என்ற இடத்திற்கு விக்கிரமாதித்தன் வருகிறான். கூடவே அவனுடைய நண்பனும் மந்திரியுமான பட்டி மற்றும் வேதாளம்.கூடவே தான் எப்போதும் வணங்கும் உஜ்ஜயினி காளியின் விக்கிரகம். இங்கு தங்கி காடு ஆறுமாதம் முடிந்து நாடு திரும்பும் போது விக்கிரகத்தை எடுக்கும்போது எடுக்க முடியவில்லை. விக்கிரமாதித்தன் கனவில் வந்த காளி, தான் இந்த ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்லஅவனும் அப்படியே ஒரு கோயில் ஒன்றைக் கட்டி விட்டுச் செல்கிறான்.

நீதிக்கதைகள் – கர்வம்!

0 comments
கர்வம்!


ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன.

தங்க நிற மீனுக்கு, தான் அழகாய் தங்கம் போல் மினுமினுப்பாய் இருப்பதால் கர்வம் அதிகம். கெளுத்தி மீனிடம் நட்பாக இருந்தாலும் அடிக்கடி அதன் தோற்றத்தைக் கண்டு கேலி செய்யும்.

ஒருநாள், தங்க மீன் மிக ஆனந்தமாய் நீரில் குதித்துக் குதித்து கும்மாளமடித்தது. அப்போது அந்தப் பக்கம் கெளுத்தி மீன் வந்தது. அதைப் பார்த்ததும் தங்க மீனுக்கு குஷி அதிகமாகிவிட்டது.

“ஹாய்… இன்றும் என் அழகைப் பார். என் மினுமினுப்பைப் பார்; வசீகரத்தைப் பார். நாளுக்கு நாள் என் மெருகு எப்படி கூடிக் கொண்டே போகிறது பார். உலகில் என் போன்ற அழகிய மீன் எங்கு இருக்க முடியும்? ஹூம்… இறைவன் உன்னையும்தான் படைத்திருக்கிறானே… அவலட்சணமாய், கறுமை நிறத்தில் சொரசொரப்பாய்… என்ன பிறவியோ நீ… இந்தக் குளத்தில் என்னைப் போல் வேறு யாரும் இல்லாததால் உன்னுடன் பழகவேண்டிய சூழ்நிலை. எல்லாம் என் தலையெழுத்து” என்றது.

பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது

0 comments


முல்லா ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒரு பானை இரவல் வாங்கினாராம். பல நாட்கள் வரை முல்லா பானையை திருப்பி தராததால், பக்கத்து வீட்டுக்காரர் வந்து பானையை திருப்பி கேட்டார். அதற்கு முல்லா “அடடே…, உங்களிடம் வாங்கிய பானையை திருப்பி கொடுக்காமல் இருந்ததிலும் ஒரு லாபம் இருக்கின்றது.

 அந்த பானை ஒரு குட்டி போட்டு இருக்கின்றது, “என்று சொல்லி அதனுடன் ஒரு சிறிய பானையும் கொடுத்தார். பக்கத்து வீட்டுக்காரர் மகிழ்ச்சியில்  இரண்டு பானையும் வாங்கிசென்றார்.
அதேபோல் சில நாட்களுக்கு பின் முல்லா அந்த பக்கத்து வீட்டுக்காரரிடம் “முன்பு கொடுத்ததை விட பெரிய பானை ஒன்று இரவல் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். பக்கத்துவீட்டுகாரர் ஒன்றுக்கு இரண்டாக கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பெரிய பானை ஒன்றை கொடுத்தார். 


பல நாட்கள் ஆகியும் முல்லா பானையை திருப்பி தரவில்லை. பின் தயங்கி தயங்கி பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து பானையை திருப்பி கேட்டார். ” அத ஏன் கேக்கறீக அந்த பானை நேற்றுதான் செத்து போச்சு” என்றார் முல்லா. கோபம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் “என்னது என்னை என்ன இழிச்சாவாயன் என்று நினைத்தாயா? பானை எப்படி செத்து போகும் ” என்று கோபமுற்றார். அதற்கு முல்லா ” பானை குட்டி போட்டதை நம்பு பொழுது ஏன் செத்து போனதை நம்பமுடியாது? ” என்று முல்லா கேட்டதும் பக்கத்து வீட்டுக்காரர் தலைகுனிந்து சென்றுவிட்டார்……

                         -The End-

என் அடிமைகளுக்கு நீ அடிமை

0 comments
















மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்று வரக் கிளம்பினான். அப்போது அவன் மனைவி தனக்கு இந்தியாவில் இருந்து ஒரு முனிவரைப் பரிசாகக் கொண்டு வரும் படி கேட்டுக் கொண்டாள். அவளுக்கு முனிவர்களிடம் பெரிய மரியாதை. முனிவர்கள் அடுத்த பிறவியில் என்ன நடக்கும் என்று தெளிவாகக் கூற வல்லவர்கள் என்றும் அவள் நம்பினாள்.

அலெக்ஸாண்டர் இந்தியா வந்தான். வேலை முடிந்து வீடு திரும்பப் போகும் முன்னர் மனைவி விரும்பிய பரிசு அவனுக்கு நினைவுக்கு வந்தது. உடனே ஒரு பழுத்த முனிவரைத் தேடிக் கண்டு பிடித்தான். அவரை தன்னுடன் வரும் படி ஆணையிட்டான்.

முனிவர் மறுத்து விட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அலெக்ஸாண்டரை இது வரை யாரும் இப்படி அலட்சியப் படுத்தியதில்லை. அவனுக்குத் தலைக்கு மேல் கோபம் வந்தது. வாளை உருவிக்கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்தான்.

முனிவரோ அலட்டிக் கொள்ளாமல் அவனைப் பார்த்துப் புன்சிரித்தார். அலெக்ஸாண்டருக்கு இது பெரும் வியப்பாக இருந்தது. முனிவரைப் பார்த்து "கொல்ல வரும் ஆளைப் பார்த்து சிரிக்கிறீரே! உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டான்.

பீர்பாலின் புத்திசாலித்தனம்

0 comments

பீர்பால்அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர்எவ்வளவு பெரிய சிக்கலையும்தமதுஅறிவுத் திறமையாலே சமாளித்து விடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்குபீர்பாலின்அறிவாற்றலை ஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது.

அதனால ஒரு கடிதத்துல"மேன்மை தாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்குஆண்டவன்தங்களுக்கு நலன்கள் பலவும்வெற்றிகள் பலவும் தருவாராகதாங்கள் எனக்கு ஒரு குடம்அதிசயம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு"தூதன்மூலமா அக்பருக்கு அனுப்பினாரு காபூல் அரசர்.

கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சுஒரு குடம் அதிசயம் அனுப்புவதாஒன்றுமேபுரியவில்லையேன்னு குழம்பிஅரண்மனையை சுற்றி வளம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றி வினவினார்.

அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை படித்தார் பீர்பால். 

பீர்பால் நீண்ட சிந்தனைக்கு பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம் அனுப்புவதாக பதில்எழுதுமாறு சொன்னார்.

அப்புறம் அக்பர்பீர்பாலிடம்ஒரு குடம் அதிசயம் எப்படி அனுபுவிர்? என்று விசாரிச்சாரு.

கிணற்றைத்தானே விற்றேன்!!

0 comments

(இது ஒரு Persia குட்டிக் கதை)











ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

                                          -The End-

வழுக்கைக்கு மருந்து !

0 comments


















அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.


தெனாலிராமன் கதைகள் – மோதிரம்

0 comments











விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர்.

அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது? என்றார்.

அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன் என்றார்.

அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார்.

அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...! என்று அரசர் ஏற்றுக் கொண்டார்.

அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள் என்றார் தெனாலிராமன்.

ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார்.

பெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன் என்றார்.



மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...என்றார்.

இராஜாங்க விருந்து - தெனாலி ராமன்

0 comments
தெனாலி ராமன் கதைகள் - இராஜாங்க விருந்து

ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.


விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம் இருக்கிறது" என்றார் தெனாலிராமன்.

ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை உண்பதே தனி சுகம் தான்" என்றார்.

தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம் கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

தெனாலிராமன் விற்றகுதிரை

0 comments

தெனாலிராமன் விற்ற குதிரை 

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலி ராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.


பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலி ராமனை சந்திக்கப் புறப்பட்டான்.