Showing posts with label விகரமாதித்தன் கதைகள். Show all posts
Showing posts with label விகரமாதித்தன் கதைகள். Show all posts

மாகாளிக்குடியும் விக்கிரமாதித்தனும்.

0 comments

















உஜ்ஜயினியை ஆண்ட விக்கிரமாதித்தனுக்கு பட்டி என்ற மந்திரி. இருவரும் இணைபிரியாத நெருங்கிய நண்பர்கள். ஒருமுறை தேவலோகத்தில் நாட்டியத்தில் சிறந்தவள் ரம்பையா ஊர்வசியா என்ற சர்ச்சை எழுந்தது. யாராலும் தீர்ப்பை சொல்ல முடியவில்லை. நாரதரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சிறந்து விளங்கும் விக்கிரமாதித்தன் தேவலோகம் அழைத்து வரப்படுகிறான். சரியான தீர்ப்பைச் சொன்ன விக்கிரமாதித்தனுக்கு பல பரிசுப் பொருட்களோடுமுப்பத்திரண்டு பதுமைகள் உள்ள சிம்மாசனம் ஒன்றையும் தந்து  ஏறிய சிம்மாசனம் இறங்காமல் ஆயிரம் ஆண்டுகள்  வாழ்க” என்றுவரம் தந்து அனுப்பி வைக்கிறான்.

பூலோகம் வந்து நடந்தவற்றை பட்டிக்கும் மற்றவர்களுக்கும் சொல்கிறான். இதைக் கேட்ட பட்டி தனது புத்திக் கூர்மையினால் காளியின் அருளால், தனக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் வாழும் வரம் வாங்கி விடுகிறான்.இதனால் மந்திரி பட்டிக்கு முன்பே விக்கிரமாதித்தன் இறந்து போகும்படி வரங்கள் அமைந்து விடுகின்றன. இதனால் இருவரும் கவலை அடைகின்றனர். தீவிர யோசனைக்குப் பின் மந்திரி பட்டி ஆறு மாதம் சிம்மாசனத்தில் அமர்ந்து நாட்டை ஆள்வது.. பின்னர் சிம்மாசனத்தை விட்டு இறங்கி காடாள்வது என்ற யோசனை சொல்கிறான். இதனால் இரண்டாயிரம் வயது விக்கிரமாதித்தனுக்கும் வந்து விடும்.

இந்த “காடாறு மாதம்; நாடாறு மாதம் “ முறைப்படி வருகையில் ஒருதடவை இந்த மாகாளிக்குடி என்ற இடத்திற்கு விக்கிரமாதித்தன் வருகிறான். கூடவே அவனுடைய நண்பனும் மந்திரியுமான பட்டி மற்றும் வேதாளம்.கூடவே தான் எப்போதும் வணங்கும் உஜ்ஜயினி காளியின் விக்கிரகம். இங்கு தங்கி காடு ஆறுமாதம் முடிந்து நாடு திரும்பும் போது விக்கிரகத்தை எடுக்கும்போது எடுக்க முடியவில்லை. விக்கிரமாதித்தன் கனவில் வந்த காளி, தான் இந்த ஊரிலேயே இருந்து கொள்வதாகச் சொல்லஅவனும் அப்படியே ஒரு கோயில் ஒன்றைக் கட்டி விட்டுச் செல்கிறான்.